மருத்துவ காப்பீட்டை ஏற்க மறுத்த மருத்துவமனை!! நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அபரதரம்!!

Photo of author

By Jeevitha

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சேகரன். இவர் தனது உடலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் 26 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார். அப்போது மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த தொகையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அப்போது அந்த தனியார் மருத்துவமனை இதை ஏற்க முடியாது என மறுக்கப்பட்டது.

இதனால் சேகரன் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் மத்தியில் சென்னை துறைமுக சபை நிர்வாகம் தரப்பில் வாதிடுகையில் இவருக்கு செய்தது அவசர சிகிச்சை அல்ல. இந்த கல்லீரல் மாற்று சிகிச்சை ஏற்கனவே முடிவு செய்தது தான். ஆனால் இவர் ஏன் சென்னை துறைமுக சபை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவில்லை, எனவே இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் மருத்துவமனையில் இருந்து கல்லீரல் தானம் செய்பவர் தயாராக இருப்பதால் நீங்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் விரைவாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனால் நீதிமன்றம் கூறியது மருத்துவ நிர்வாகம் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியதால் தான் அவர் சேர்த்துள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது என கூறி அவருக்கு  மருத்துவ சிகிச்சைக்கு ரூ.26 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் அவரின் வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.