நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்வது வீடு தான். அந்த வீட்டினை கட்டும் பொழுது எந்த திசையை நோக்கி நிலை வாசலை அமைக்கிறோமோ அதனை பொறுத்துதான் அந்த குடும்பத்தின் முன்னேற்றம் அனைத்தும் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு வடக்குப் பார்த்தவாறு நிலை வாசலை அமைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம்.
பொதுவாக வடக்கு என்பது குபேரனின் திசையாக கருதப்படுகிறது. என்னதான் குபேரனின் திசையாக கருதப்பட்டாலும் கூட அந்த வடக்கு திசை ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் சிலருக்கு அந்த திசை கை கொடுக்காது. ஒரு பெண் குடும்பத்தில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறாள் என்றால் அந்த வடக்கு திசை அந்த குடும்பத்திற்கு ஏற்றது. வடக்கு திசையில் நிலை வாசல் கொண்ட வீடுகளில் செல்வ செழிப்பு நன்றாக இருக்கும்.
சிறிய மற்றும் பெரிய தொழில் செய்பவர்கள் அதாவது ஏதேனும் ஒரு சொந்த தொழிலை செய்பவர்களுக்கு இந்த வடக்கு திசை சிறந்த அனுகூலத்தை தரும். பண விரயம் ஏற்படாது. வடக்கு பார்த்த வாடகை வீடுகளில் வசிப்பவர்களும் சில காலங்களுக்குப் பிறகு தனக்கென ஒரு சொந்த வீடுகளை கட்டிக் கொள்வார்கள்.
ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய இடங்களில் புதன் இருக்கக்கூடிய ஜாதகக்காரர்களுக்கு இந்த வடக்கு பார்த்த வீடு அவ்வளவு சிறந்த பலன்களை தராது. வடக்கு திசையில் அமைந்த வீடுகளில் வடகிழக்கு பக்கத்தில் ஏதேனும் வாஸ்து பிரச்சனையோடு வீட்டினை கட்டி இருந்தால் அந்த வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். அதேபோன்று வடமேற்கு திசைகளில் ஏதேனும் வாஸ்து பிரச்சனையோடு வீட்டினை கட்டி இருந்தால் அது பஞ்சாயத்து, கோர்ட், கேஸ், வாக்குவாதம், தகராறு என ஏதேனும் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
வடக்கு பார்த்தவாறு ஏதேனும் வீட்டு மனைகளை வாங்கினால் அதன் அருகில் கிணறோ, பள்ளத்தாக்கோ இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும். வடக்கு பார்த்தவாறு வீடு கட்டும் பொழுது நிலை வாசலுக்கு முன்புறம் சற்று தாராளமான இடம் இருக்க வேண்டும். வடக்கு பார்த்தவாறு உள்ள வீடுகளுக்கு தடுப்பு சுவர் கட்டினால் அதன் நில அமைப்பு தெற்கு மற்றும் மேற்கு பக்கம் சற்று உயரமாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பக்கம் சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு தடுப்பு சுவர் கட்டி கேட்டினை வைக்கும் பொழுது வடகிழக்கு பக்கத்தில் கேட்டினை வைக்க வேண்டும். வைக்கக் கூடிய கேட்டானது தடுப்பு சுகருக்கு மேல் இருக்கக் கூடாது. அதேபோன்று வீட்டின் மேல் வைக்கக்கூடிய தண்ணீர் டேங்கினை தென்மேற்கு திசையில் வைப்பது நல்லது.
மீனம், விருச்சிகம், கடகம் போன்ற ராசியினருக்கு இந்த வடக்கு பார்த்த வீடுகள் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோன்று புனர்பூசம், சுவாதி, அவிட்டம் போன்ற நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த வடக்கு திசை வீடு சிறப்பை தரும்.