தேனி மாவட்டம் கூடலூரில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸ் வராததால், தள்ளுவண்டியில் வைத்து மயானாத்துக்கு கொண்டு சென்று எரித்த சம்பவம் அனைவர் மனதையும் உழுக்கியது.
கொரோனா தொற்று உறுதியான அந்த பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காதது மற்றும் கொரோனாவால் இறந்த பெண்ணை அரசே பாதுகாப்பான முறையில் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று தகனம் செய்யாதது குறித்து இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் ஆகியுள்ளது.
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம். இது குறித்து நான்கு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.