திருப்பதி அசோக் நகரில் முரளி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முரளி தற்போது ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அனுதீப். 22 வயதுடைய இந்த இளைஞர் பிசிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். அனுதீப் சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதியதால் இளைஞர் அங்கேயே தூக்கிஎறியப்பட்டார்.
பின்னர் அனுதீப்புடன் வந்த அவரது நண்பர்கள் அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனுதீப் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிசிடிவி காட்சிகளின் படி அனுதீப் வேகமாக மின்கம்பத்தில் மோதியதால் துடிதுடித்து இறந்தது பதிவு ஆகியுள்ளது.
இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து போலீசார் கூறுகையில், இளைஞர்கள் அனைவரும் வாகனத்தில் பொறுமையாக செல்ல வேண்டும், கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், தங்களுடைய குடும்பத்தை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக வண்டியை ஓட்ட வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார்.