Minister Ponmudi:வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஃபெஞ்சல் புயல் வட தமிழக மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரில் முழு நிரம்பி இருக்கிறது. மேலும் ஃபெஞ்சல் புயல் தொடர்மழை காரணமாக வெள்ளக்காடாக விழுப்புர மாவட்டம் மாறி இருக்கிறது.
விழுப்புர மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. பல மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறவில்லை என போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், அரசூர் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து பொது மக்கள் உணவு மற்றும் குடிநீர் கேட்டு 3 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதன் பிறகு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்று இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. அப்போது அவர் மீது போராட்டக்காரர்கள் சேற்றை எடுத்து வீசி இருக்கிறார்கள். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்பு மாவட்டம் வெள்ளம் அதிக அளவில் பாதிக்க அந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் திறக்கும் போது மக்களிடம் எவ்வித பாதுகாப்பு அறிவிப்பும் அறிவிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.