Indian rupee value: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின் தாக்கத்தினால் இந்தியாவில் தங்கம் விலை குறைந்து என்று கூறலாம். இந்த நிலையில் அந்நிய நாட்டு முதலீடுகளை வெளியேற்ற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது அமெரிக்க நாடு. இதனால், இந்தியா அந்நிய நாட்டில் செய்த முதலீடுகளை திரும்ப பெரும்.
இந்த சூழல் இந்தியா நாட்டிற்கு வரக்கூடிய அந்நிய நாட்டு லாபங்கள் குறைந்து உள்ளது. எனவே இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. மேலும், உலக அளவில் டாலர் மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இந்தியா பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.இது இந்திய மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் வருடாந்திர நிதி பட்ஜெட்டை பாதிக்கும்.
டாலர் மதிப்பு அதிகரித்து செல்வதால் அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேவைகள் மற்றும் பொருட்களின் பண மதிப்பு அதிகரிக்கும் இதனால் இந்தியாவுக்கு செலவுகள் முன்பு இருந்ததை விட மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பணவீக்கமும் அதிகரித்து இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பெறப்பட்ட கடன்களின் வட்டி அதிகரிக்க போகிறது.
இந்தியா அந்நிய செல்வாணிக்காக வைத்து இருக்கும் பண இருப்பு பெரும் பாதிப்பு அடையும். அதாவது அமெரிக்க டாலருக்கு நேராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.85.4 ஆக குறைந்து இருக்கிறது.