மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொரோனா வைரஸ் மாதிரிகள் சாலையோரத்தில் சிதறிக் கிடப்பது மக்களிடையே பெரும் பரபரப்பையும்,மருத்துவ ஊழியர்கள் அலட்சியத்தையும்,
காட்டியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி சாலையில்,கொரோனா பரிசோதனை மாதிரிகள் சிதறிக் கிடந்தன.இதனால் அப்பகுதி மக்களிடையே நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை,அப்புறபடுத்த நடவடிக்கை எடுத்தனர்.
ரோட்டில் சிதறி கிடக்கும் இந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியவாறு: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அவ்வாறு அங்கு சேகரிக்கப்படும் பரிசோதனை மாதிரிகள் ஆம்புலன்ஸ் மூலமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இந்நிலையில் தலைவாசல் பகுதியில், முகாம் வாயிலாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதனால் அதனை மருத்துவ ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில்,அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பொழுது தவறுதலாக சித்திர விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்.மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறியுள்ளனர்.மேலும் கொரோனா மாதிரிகளை தவறவிட்ட மருத்துவ ஊழியர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது எனவும்,இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆத்தூர் சுகாதார துணை இயக்குனர் உறுதியளித்துள்ளார்.