மகளை திருமணம் செய்யலாம் என அறிவித்த அரசு!! சர்வதேச அளவில் கொந்தளிக்கும் மக்கள்!!

Photo of author

By Jeevitha

Big News: ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்களிடையே உலக அளவில் பெரும் சர்ச்சைகள் நிகழ்ந்து உள்ளது.

ஈரானில் சுகாதாரத்துறை துணை அமைச்சர் அலிரோசா ரைசி இளமையான ஈரானை உருவாக்க 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டாயம் என அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்ற பெயரில் ஈரான் அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது.

அதில் தத்தெடுத்து வளர்க்கும் பெண் குழந்தை அல்லது முன்னாள் கணவர் மூலம் மனைவி பெற்ற பெண் குழந்தை 13 வயதை எட்டிய பிறகு தந்தை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஈரானை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடாது, மற்றும் சர்வதேச அளவில் இதை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அது மட்டும் அல்லாமல் பெண்களின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதையும் குறைத்து 9 வயதாக மாற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆண்களின் திருமண வயது 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் காரணம் கடந்த 1979-இல் நடைபெற்ற ஈரான் புரட்சி தலைகீழாக மாறியதே. இதுகுறித்து இந்திய சமூக ஆர்வலர்கள் கூறியது, “ ஈரானில் வாழும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டில் ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது 450-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவை விமர்சிக்க ஈரானுக்கு எந்த வகையிலும் தகுதி கிடையாது என தெரிவித்துள்ளனர்.