tvk: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினை அதிகரித்து வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார். தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தினர். அதில் தவெக கட்சியின் அரசியல் நோக்கம், கொள்கைகள் பல லட்ச ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார். திமுகவை நேரடிய எதிர்த்து இருக்கிறார்.
மேலும், தவெக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அவரது கொள்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தவெக கட்சியினர் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதாவது, விஜய் ஆரம்ப காலத்தில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி அறிவித்தார்.
அதன் பிறகு விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்து ரசிகராக விஜய்யை பின்பற்றி வருபவர்கள், விஜய் கட்சி தொடங்கிய பின் கட்சியில் இணைந்தவர்கள் என இரு தரபினராக தவெகவில் நிர்வாகிகள் இருக்கிறார்கள். குறிப்பாக தனது செல்வாக்கை பயன்படுத்தி தற்போது கட்சியில் இணைந்தவர்களுக்கு தவெக கட்சி பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
அதை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து பெரியார் சிலைக்கு மரியாதை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் மற்றும் அமைப்பாளர் இருவரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி இருப்பது கட்சியில் உள்ள கட்டமைப்பு சரிவர இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இதில் விஜய் விரைந்து தலையிட வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.