ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Photo of author

By Hasini

ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனீஷ் சித்திக். இவரது புகைப்படங்கள் உலக நாடுகள் பலவற்றையும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியாவில் கொரோனா பரவுவதும், அதன் காரணமாக பலர் இறந்து வந்த நிலையில்  கங்கை நதிக்கு அருகே பிணங்கள் எரிக்கப்படும் புகைப்படமாக வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக ஆனது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் வேகமாக பரவி வந்த நேரத்தில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா  கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தது. அப்போது கங்கை நதிக்கு அருகே பல இடங்களில் கொத்துக்கொத்தாக உடல்கள் எரிக்கப்பட்டது.

உத்திர பிரதேசத்தில் பல இடங்களில் கங்கையில் பிணங்கள் எரிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது இதை அப்படியே புகைப்படமாக எடுத்து வைத்தவர் தான் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனீஷ் சித்திக். இந்தியாவில் ஏற்பட்ட கொடூர மரணங்கள் குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள்தான் சர்வதேச மீடியாக்களை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. உலக சுகாதார மையம் தொடங்கி பல நாடுகள் இந்தியாவின் கொரோனா பரவல் குறித்து பேசுவதற்க்கு  இவரது புகைப்படமே காரணமாக இருந்தது.

இந்தியாவின் இரண்டாம் வகை கொரோனா பாதிப்பை ஒரே புகைப்படத்தின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியவர். இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையையும், அங்கு நடக்கும் அரசியல் மாற்றங்களையும், செய்திகளாக வெளியிட்டு வந்துள்ளார்.

முக்கியமாக தலீபான்களின் படைகள் முன்னேறி வருவதை இவர் நெருக்கமாக இருந்து படம் பிடித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட இராணுவத்தின் மீட்பு என்று அவர்களோடு கலந்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருந்தார். மீட்பு பணியில் செய்தி சேகரிக்க சென்ற போது, இவரின் கல்வான் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பே தலிபான்களால் தாக்கப்பட்டது.

ஆர்பிஜி ரக குண்டுகள் மூலம் இவரின் கல்வான் தாக்கப்பட்டது. உயிர் தப்பிய டேனீஷ் அப்போது நடத்த அனுபவம் குறித்து செய்தி ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். ஆப்கன் படைகள் எப்படி செயல்படுகின்றன. மக்களை காக்க எவ்வளவு கஷ்டப் படுகின்றன என்றும் உருக்கமான செய்தியை அவர் வெளியிட்டிருந்தார்.

ஆப்கன் உள்நாட்டுப் போர் குறித்தும் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கந்தகார் போகின்ற பகுதியில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார். ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சித்திக் கொல்லப்பட்டுள்ளார். உலகம் முழுக்க இந்திய செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் உயரிய புளிட்சர் விருதும் வாங்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.