Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம்! அடி உதை வாங்கிய நபர்!!

Photo of author

By Sakthi

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம்! அடி உதை வாங்கிய நபர்!!

Sakthi

Whatsapp ஸ்டேட்டஸில் தி கேரளா ஸ்டோரி படம். அடி உதை வாங்கிய நபர்!
இந்தியாவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு  எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்ஸில் வைத்ததற்கு தாக்கப்பட்டதாக ஒருவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகிதா பிஹானி, சோனா பிஹானி, சித்தி இட்னானி நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து இந்த படத்தை பற்றி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஸில் வைத்ததற்கு தாக்குதலுக்கு உள்ளானதாக ஒருவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த சம்வம் நிகழ்ந்துள்ளது. வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஸில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பகிர்ந்ததால் தான் நான் தாக்கப்பட்டேன் என்று அந்த நபர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட போது புகார் அளித்தவர் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மூலமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை காண வேண்டும் என்று இளம்பெண்களை வற்புறுத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த நபரிடம் காவல் துறையினர் மேலும் விசாரனணை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தி கேயளா ஸ்டோரி படத்தை பார்த்து விட்டு அனைவரும் காண வேண்டி ஒரு.படம் என்று தி கேரளா ஸ்டோரி படத்திற்கு புகழாரம் அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது.