சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி! ஆர்வம் காட்டாத ஓடிடி நிறுவனங்கள்

Photo of author

By Sakthi

சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி! ஆர்வம் காட்டாத ஓடிடி நிறுவனங்கள்

Sakthi

சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி! ஆர்வம் காட்டாத ஓடிடி நிறுவனங்கள்
இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வாங்கி ஓடிடியில் வெளியிட எந்த ஓடிடி நிறுவனங்களுக்கும் ஆர்வம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மலையாளப் படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அடா ஷர்மா, சித்தி இட்னானி மற்றும் பலர் நடித்துள்ளனர். கேரளா மொழிப் படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவிருந்தது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான பொழுதே படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் மே 5ம் தேதி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் வெளியானது. பல கட்சிகளும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்தது. பாஜக தலைவர் அமித்ஷா, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த திரைப்படத்திற்கு ஆதரவாஇ பேசினர்.
இதற்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வாங்கி ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் கதை கல்லூரியில் படிக்கும் பெண்களை அவர்களுடன் படிக்கும் இஸ்லாமியப் பெண்கள் மூளை சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பது தான் கதையாகும். இந்த மாதிரி ஆபத்தான கருத்தினை கதையாகக் கொண்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை  கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாடு, மேற்குவங்கம் இன்னும் பிற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் வெளிளியிடவில்லை. இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்களும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வாங்கி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றது.