மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா!

0
166
The kidnappers who released the school students three months later! - Nigeria!
The kidnappers who released the school students three months later! - Nigeria!

மூன்று மாதங்களுக்கு பின் பள்ளி மாணவர்களை விடுவித்த கடத்தல்காரர்கள்! – நைஜீரியா!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், நைஜர் மாகாணம் என்று ஒன்று உள்ளது. அங்கு இஸ்லாமிய பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிக்குள் கடந்த மே 30ஆம் தேதி துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்து, படித்துக் கொண்டிருந்த 136 மாணவர்களையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஆனாலும் அவர்களால் மாணவர்களை மீட்க முடியவில்லை. இதனிடையே கடந்த ஜூன் மாதம் அவர்களின் பிடியில் இருந்த 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 மாணவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து வந்து விட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கள் பிடியில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திக் கொண்டு சென்றவர்கள், நேற்று திடீரென்று விடுதலை செய்துள்ளனர்.

ஆனால் விடுதலை செய்யப்பட்டவர்களின் முழு விவரங்கள் தற்போது எதுவும் வெளி வரவில்லை. ஆனால் கடத்தல்காரர்களின் பிடியில் தற்போது எந்த மாணவர்களும் இல்லை என இஸ்லாமிய பள்ளி தலைவர் அபுபக்கர் அல் ஹசன் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன. மாணவர்களை விடுதலை செய்ய கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனால் அதை பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Previous articleஇந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!
Next articleநெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி!