பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

Photo of author

By Janani

பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!

Janani

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒலிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும், பணவரவும் சீராக இருக்கும்.

அப்படிப்பட்ட அற்புதமான பலன்களை கொடுக்கும் விளக்கு இவ்வளவு நேரம் தான் எரிய வேண்டும் என்கிற சாஸ்திரமும் உண்டு. நாம் நம் வீட்டு பூஜை அறையில் எவ்வளவு விளக்குகள் ஏற்றலாம்? எவ்வளவு நேரம் எரியவிடலாம்? போன்ற கேள்விகளுக்கும் விடையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நமது வீட்டின் பூஜை அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. விளக்கு எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் அல்லது நெய் போன்றவற்றை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். பொதுவாக பூஜை அறையில் இரட்டை விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும் அவை ஒரே மாதிரியான விளக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முன்னொரு காலத்தில் ஒரு எலி ஆனது விளக்கை தூண்டி, சுடரை ஒளிரச் செய்தது அதன் காரணமாக அந்த எலி மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்குமாறு சிவபெருமான் திருவருள் புரிந்தார். இதன் மூலம் விளக்கேற்றுவதால் மிகப்பெரிய திருவருள் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகவே விளக்கினை ஏற்றினால் நல்ல அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில்களில் விளக்கேற்றும் பொழுது இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. இந்த எண்ணெயால் விளக்கேற்றி எந்த தெய்வத்தை வழிபட்டாலும் என்ன நினைத்து வழிபடுகிறோமோ, அந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது ஆன்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

விளக்கு ஏற்றும் பொழுது ஒற்றையாகத் திரியை போடவே கூடாது. இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து போட்டு திரித்து தீபம் ஏற்றுவது அதிக பலன்களை கொடுக்கும்.அது எந்த விளக்கமாக இருந்தாலும் சரி, இரண்டு திரிகளை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். முதலில் விளக்கில் எண்ணெய் ஊற்றிவிட்டு தான் திரியை போட வேண்டும். திரியைப் போட்டுவிட்டு அதன் பிறகு எண்ணெய் ஊற்றக்கூடாது.

நீங்கள் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றினாலும், குத்துவிளக்கு ஏற்றினாலும் கூடவே சேர்த்து ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். அகல் தீபத்திற்கு மன தெளிவை உண்டாக்கும் ஆற்றல்கள் உண்டு. மனதில் குழப்பங்கள் இருக்கும் பொழுது அகல் தீபத்தை ஏற்றி வைத்து, அதன் ஜோதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்தால் குழம்பிய மனது உடனே தெளிவடையும்.

செல்வ செழிப்பை பெற குத்துவிளக்கு ஏற்றலாம் குத்துவிளக்கில் ஒரு முகம், இரண்டு முகம் அல்லது ஐந்து முகங்களில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தையும், சிறிதளவு பச்சரிசியையும் வைத்து விளக்கில் எண்ணெய் ஊற்றிய பின், அதில் நாலைந்து கல்கண்டுகளை போட்டு தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம்.

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நல்ல நேரம் பார்த்து ஏற்றுவது அமோகமான பலன்களை கொடுக்கும். மாலை 5:36 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக தீபத்தை ஏற்றுவது முறையாகும். மற்றபடி ராகு, குளிகை, எமகண்டம் தவிர்த்து தீபம் ஏற்றலாம்.

ஆறு மணிக்கு நாம் தீபத்தை ஏற்றினால் அதனை ஏழரை மணிக்குள் புஷ்பத்தை கொண்டு மலையேற்றி விட வேண்டும். அதற்கு மேல் தீபத்தை எரியவிடக்கூடாது. பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் அணையா விளக்கு ஏற்றும் பொழுது நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம். அதில் எந்த ஒரு குற்றமும் இல்லை. மற்ற சமயங்களில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தீபத்தை ஏற்றி வைப்பது நல்லதல்ல.