பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

Photo of author

By Janani

பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!

Janani

அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்று தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது.

நமது விளக்கில் ஊற்றக்கூடிய எண்ணையும், திரியும் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் ஏற்றக்கூடிய தீபத்தினை ஒருபோதும் வாயினால் ஊதி அணைக்க கூடாது. அவ்வாறு ஊதி தீபத்தினை அணைத்தால் நமது வீடுகளில் தரித்திரம் வந்து குடியேறும் என்பது சாஸ்திரத்தின் கருத்து.

அவ்வாறு வாயினால் ஊதி தீபத்தினை அணைப்பது இறைவனை அவமதிப்பதற்கு சமமாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு நமது வீட்டில் தீபம் இயற்றிய பிறகு அந்த விளக்கில் மீதம் இருக்கும் திரியை பலரும் தூக்கி எறிந்து விடுவர். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. இந்த மீதமுள்ள திரியை என்ன செய்யலாம்? என்பது குறித்த தகவல்களை தற்போது காண்போம்.

வீட்டிலோ அல்லது கோவிலிலோ தீபம் ஏற்றும் பொழுது பருத்தியால் செய்யப்பட்ட திரியை நெய், நல்லெண்ணெய் மற்றும் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றுவார்கள். தினமும் நமது வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு அந்த விளக்கில் உள்ள திரியானது முழுமையாக எரிந்து, சாம்பலாக மாறி இருக்கும் அல்லது பாதி அளவு திரி அப்படியே விளக்கில் மீதம் இருக்கும்.

இந்த மீதம் உள்ள விளக்கு திரியின் சாம்பல் மற்றும் திரிகளை எக்காரணம் கொண்டும் குப்பையில் போடக்கூடாது. இது சாஸ்திரத்தின் படி தவறு என்றும் கூறப்படுகிறது. விளக்கில் மீதம் இருக்கும் சாம்பல் மற்றும் திரிகளை பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திரிகள் நமது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்க பயன்படுகிறது.

இந்து மதத்தில் பூஜையின் பொழுது வீட்டு தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றுவது என்பது வழக்கம். இந்த வழக்கமானது பல நூற்றாண்டு காலங்களாக தொடர்ந்து வருகிறது. பூஜைக்குப் பிறகு மீதம் இருக்கும் பருத்தி திரிகளை ஒரு இடத்தில் சேகரித்து வையுங்கள். திரிகள் அதிகமாகி விட்டால் அவற்றை எரித்து சாம்பலாக மாற்றி, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சாம்பலை குழந்தைகளுக்கு தினமும் நெற்றியில் வைத்து விடுவதன் மூலம் எந்த வித தீய சக்திகளும் குழந்தைகளிடம் நெருங்காது. இந்த மீதம் இருக்கும் விளக்கு திரிகளை கற்பூரத்துடன் சேர்த்து நமது வீட்டின் ஈசானி மூலையில் வைத்து எரிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கும். எக்காரணம் கொண்டும் கழிவறை பகுதியில் இந்த திரிகளை எரிக்கக் கூடாது.

பூஜையில் பயன்படுத்தப்பட்ட இந்த திரிகள் மந்திரங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவை. இந்த திரிகளை கற்பூரத்துடன் சேர்த்து நமது வீட்டில் எரிப்பதால் எதிர்மறை சக்திகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நமது வீடுகளில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது அதனுடன் கற்பூரம், கிராம்பு மற்றும் இந்த திரிகளை போட்டு தூபம் போடுவதன் மூலம், நமது வீட்டில் காற்றில் பரவி இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும். இந்த முறைகளில் விளக்கு திரிகளை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் இந்த திரிகளை எரித்து மண் தொட்டிகளில் போட்டு விடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் குப்பைத் தொட்டியில் மட்டும் போட்டு விடக்கூடாது.