கடைசி அமெரிக்க வீரரும் ஆப்கனில் இருந்து வெளியேறினார்! அதற்கான புகைப்படம்!
தற்போது ஆப்கனனை முழுவதும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், 20 வருடங்களாக நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதனை முன்னிட்டு ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வோம் என்று அமெரிக்கா தெரிவித்தது. அதுவும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேறுவதாக சொல்லியிருந்தது. அதேபோல் தன் நாட்டு மக்களையும் வெளியேற்றுவதிலும் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக செயல்பட்டன.
இந்த சூழலில் கடந்த 24ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் மொத்தம் 190 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதனை அதிபர் ஜோ பைடன் உறுதி செய்துள்ளார். மேலும் காபுலில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படத்தையும் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இது பற்றி அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில் காபுலில் அமெரிக்கப் படைகளின் வேலை முடிந்ததன் அடையாளமாக கடைசி அமெரிக்க வீரரான மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ நேற்று C 17 ரக விமானத்தின் மூலம் புறப்பட்டு சென்றார் என தெரிவித்ததோடு அவர் ஆயுதங்களுடனும், ராணுவ உடையுடனும் வெளியேறும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது.