ADMK DMK: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அங்குள்ள நிலைமையை பற்றி கவலை தெரிவித்ததோடு, தமிழக அரசையும் குறை கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியில் 700 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பை விட 5 மடங்கு கூடுதலாக நெல் விளைந்துள்ளது. சென்ற ஆட்சியில் போதிய கிடங்குகள் கட்டாதது பிரச்சனைக்கு காரணமானதால் இந்த சமயம் நெல் பாதுகாப்பு கிடங்கு கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க சர்க்கரை ஆலை கிடங்குகள், சிவில் சப்ளைஸ் கிடங்குகளை பயன்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் நெல் கொள்முதலும், பாதுகாப்பு பணிகளும் அதிகளவு விரிவுப்படுத்தபட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சி தலைவர், பொய்யை உண்மையை போல மிகவும் தத்ருபமக கூறுகிறார் என்று அவர் தெரிவித்திருந்தார். பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த விரிவாக விவாதிப்பதற்காக அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண் துறை செயலர், தோட்டக்கலை துறை இயக்குனர் போன்ற முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.