முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் த.வெ.க கட்சிகளின் வளர்ச்சியை விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக “தி.மு.க அதிக வாக்குகள் கொண்ட வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், “த.வெ.க இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் தான் அ.தி.மு.க உடன் கூட்டணியை அமைத்தோம், ஆனால் அ.தி.மு.க-வே தற்போது வலிமை இழந்து வருவதாகவும், அது மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு செல்லப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இவர் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் ஆதரவு அளித்து பேசி இருப்பது ஏதாவது ஒரு கூட்டணியில் அவர் இணைய போவதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இது பா.ஜ.க தலைமைக்கு எதிரான அண்ணாமலையின் புதிய முயற்சியாகவும் கருதப்படுகிறது.
மேலும், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க, திடீரென திருச்சியில் இருந்து தனது பிரச்சார இடத்தை மாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனைத்து அரசியல் மாற்றங்களும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சூழலை மேலும் சிக்கலாக்கி உள்ளன. அண்ணாமலையின் புதிய முயற்சிகள், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியின் நிலை, த.வெ.க வளர்ச்சி ஆகியவை, எதிர்வரும் தேர்தலின் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.