காவல்துறை அதிகாரி செய்த அந்த காரியத்தால்! அதிர்ந்து போன அரசு!

Photo of author

By Sakthi

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கோரிக்கை கடிதம் வெளியாகி இருக்கின்றது அது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சென்னையை சார்ந்த காவல்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் என்பவர் எழுதிய அந்த கோரிக்கை கடிதத்தில், நான் காவல் துறையில் 2003ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாக மனுக்களை தேர்தல்அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்புவதற்கு நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று எல்லா காவல்துறையினர் சார்பாகவும் இந்த கோரிக்கை மனுவை அளிக்கின்றேன். அரசு பணிகளில் கூடுதலான பணிச்சுமை தொடர்ச்சியாக பணிபுரியும் துறையாக காவல்துறை இருக்கின்றது. இதன் காரணமாக, பலர் மன அழுத்தத்திலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைந்த சம்பளத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றி வருகின்றோம். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற எந்த அதிகாரிகள், மற்றும் ஆட்சியாளர்களும் முயற்சி செய்யவில்லை. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று தாங்கள் முதலமைச்சரானால் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை வரையறை செய்யப்படவேண்டும் காவல்த்துறையினர் புகார்களை தெரிவிக்க மாவட்டம் தோறும் தன்னார்வலர், அடிமட்ட காவலர் ,அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். மற்றும் சங்கம் அமைப்பதற்கு அனுமதி வேண்டும் சீருடையில் இருக்கும் மெட்டல் பட்டன் முறையை மாற்ற வேண்டும். வாரம் விடுப்பு அவசியம் ஞாயிற்றுக்கிழமைகளில் பணி புரிவோரின் ஊதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு மாற்ற அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பதவி உயர்வு ஆகியவை காவல்துறை பணியில் உள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும் கூடுதலாக பணிபுரியும் நேரங்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு 25 ஆண்டு என்பதை 20 ஆண்டாக குறைக்க வேண்டும். அரசு பேருந்துகளில் பணி சம்பந்தமாக செல்லும் காவல்துறையினருக்கு இலவசப் பயணச் சலுகை அளிக்க வேண்டும். வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு கைதிகளை அழைத்துப் போகும் போது காவல் துறையினருக்கு சிறப்பு பயணப்படி மற்றும் உணவுப் படி ஆகியவை வழங்க வேண்டும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும், கைதிகளை அழைத்துச் செல்ல பிரத்தியேக வாகனம் வேண்டும். சென்னை போல மற்ற மாவட்ட மாநகரங்களிலும், பணிபுரிவோருக்கு உணவு படி வழங்க வேண்டும் சட்டம் ஒழுங்கு பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு இப்போது வழங்கப்படும் வாகன எரிபொருள் ரூபாய் முன்னுரை ஆயிரமாக உயர்த்த வேண்டும். போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்த காவல்துறை அதிகாரி ஸ்டாலினுக்கு அனுப்பி இருக்கின்றார்.

எதிர்க்கட்சியாக இருக்கின்ற திமுகவிற்கு எழுதியிருக்கும் இந்த கோரிக்கை மனு இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரல் ஆகி வருகின்றது அது ஆளும் தரப்பையும், உயர் அதிகாரிகளையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கின்றனர்.