
DMK ADMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அதிமுகவும் திமுகவும் அயராது உழைத்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படத்திலிருந்து மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லாமல் இபிஎஸ்யின் தலைமையில் அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. அவர் அதிமுகவின் தலைவர் பதவியை வகித்ததிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் மேலும் தோல்வியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்ட செங்கோட்டையனின் பதவியை பறித்தது மட்டுமல்லாமல் நேற்று கட்சியிலிருந்து அடியோடு நீக்கி விட்டார். செங்கோட்டையன் வேறு அணியில் இணைந்தது அதிமுகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லையென்று கூறும் இபிஎஸ், இதனால் திமுகவிற்கு பலம் என்பதை மறந்து விட்டார். சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அந்த பகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் நோக்கில் திமுக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் மேற்கு மண்டல பொறுப்பாளராக திமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜி நியமிக்கபட்டுள்ளார். மேற்கு மண்டலத்தில் 39 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் அதனை மெல்ல மெல்ல செந்தில் பாலாஜி அவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக கூறுகின்றனர். இந்த 39 தொகுதிகளிலும் செந்தில் பாலாஜி யாரை தேர்வு செய்கிறாரோ அவர் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
தற்போது செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக கூட இல்லாத பட்சத்தில் அப்பகுதி மக்களின் கோபம் முழுமையாக இபிஎஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுக பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய திமுக செந்தில் பாலாஜியின் மூலம் மேற்கு மண்டலத்தை முக்கியமாக கோபிசெட்டிபாளையத்தை தன் வசம் ஈர்த்து விடும் என்ற கருத்து பரவி வருகிறது.
