DMK CONGRESS: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நினைத்த சமயத்தில், தான் கரூர் சம்பவம் தவெகவை அடியோடு சிதைக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் விஜய் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல்வேறு சிறிய கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆனால் விஜய் ஜனவரியில் தான் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதில் தெளிவாக உள்ளார். இந்த நிலையில் திமுகவில் உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. திமுகவில் கூட்டணி கட்சிகள் அனைத்தும், அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கேட்டு தலைமையை வலியுறுத்தி வருகின்றன. கே.எஸ். அழகிரியை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் இதனை கேட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், கூட்டணி கட்சிகளுக்கு போதுமான அளவு தியாகத்தை செய்து விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். எந்த அளவுக்கு தாக்கம் என்பது தெரியவில்லை. விஜய்யின் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மாறியுள்ளதா என்பது தேர்தலில் தான் தெரியும் என்று கூறியிருந்தார்.
இவரின் விஜய் குறித்த பேச்சு, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போலவே உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். திமுக, தவெகவை விமர்சித்து வருகையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது திமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் கோரிக்கைக்கு திமுக ஒப்பு கொள்ளவில்லை என்றால் தவெக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.