தவெகவிற்கு பச்சை கொடி காட்டிய காங்கிரஸின் முக்கிய புள்ளி.. விஜய்க்கு புகழாரம்!!

0
104
The main point of the Congress that showed the green flag to TVK .. Praise for Vijay!!
The main point of the Congress that showed the green flag to TVK .. Praise for Vijay!!

TVK CONGRESS: தமிழகத்தில் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கட்சி துவங்கிய விஜய் 2026 தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். அப்போதிலிருந்தே விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. விஜய் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸுடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார். இதனால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தவெகவிற்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அது ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம் தான்.

இதன் காரணமாக காங்கிரஸ் விஜய் உடன் கூட்டணி அமைக்க யோசித்தது. அது மட்டுமல்லாமல், தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருந்து வரும் சமயத்தில், அதனை விட்டு விலகுவது தவறான முடிவு இல்லை என்றும் காங்கிரஸ் தலைமை நினைத்தது. ஆனால் திமுகவிடம் அதிக தொகுதிகளை பெற விஜய்யை பயன்படுத்தி கொண்டது. இவ்வாறு தவெக-காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் இருந்த நிலையில், காங்கிரசின் முக்கிய தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

தவெக பிரச்சாரத்திற்கு கூடும் கூட்டத்தை பற்றி பேசிய கருத்து தெரிவித்த பிரவீன் சக்ரவர்த்தி, மற்ற அரசியல் கட்சிகள் மக்கள் கூட்டத்தை கூட்ட, பணம், நேரம் மற்றும் உழைப்பை செலவிட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் இதற்கு நேர் எதிராக உள்ளது. கூட்டத்தை சமாளிப்பதே அவருக்கு சவாலாக இருக்கும். இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பது போல உள்ளது எனவும், காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெக உடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

Previous articleஎங்களின் கோரிக்கைகளை திமுக தலைமை நிறைவேற்றவில்லை.. காங்கிரஸ் தலைவர் போட்ட வெடி!!
Next articleதவெக தலைவரை மறைமுகமாக தாக்கிய துணை முதல்வர்.. சூடு பிடிக்கும் அரசியல் அரங்கு!!