
MDMK: நேற்று அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவிப்பதும், கூட்டம் நடத்துவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து திருச்சியில் அண்ணாவின் 177 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுகவினர் சார்பிலும் மாநில மாநாடு நடைபெற்றது.
வருடா வருடம் அண்ணாவின் பிறந்தநாளில் மாநில மாநாடு நடத்துவது மதிமுகவின் வழக்கம். இந்த விழாவிற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இந்த விழாவில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பேசி முடிக்கும் வரை தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவரின் பேச்சு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் இருந்தது.
இதனை பொது மக்கள் வியப்புடன் கண்டனர். மதிமுகவினரின் அணி திரள்வோம் ஆர்ப்பரிப்போம் அங்கீகாரம் பெறுவோம் என்ற முழக்கம் 2026 தேர்தலை எதிர்நோக்கி எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. இதற்கு முன் தவெக சார்பில் திருச்சியில் பிரச்சாரம் நடைபெற்ற போது கூடிய கூட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் மதிமுகவின் மாநில மாநாட்டில் எந்த வித திரை பிரபலமும் இல்லாமல் கூட்டம் கூடியதை மதிமுகவினர் முதல் வெற்றியாக கருதுகின்றனர். இதன் மூலம் திருச்சி மக்களின் வாக்கு தவெகவிற்கு செல்லுமா இல்லை மதிமுகவிற்கு செல்லுமா என்பது மக்களிடையே விவாதமாக உள்ளது.