TVK PMK: பாமகவில் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. எதிர் தரப்பு ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வந்த அன்புமணியும், ராமதாசும், இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி தான் தலைவர் என்ற கருத்தை மறுக்கவில்லை.
மேலும், பாமகவில் தற்சமயம், தலைமை போட்டி நிலவி வருவதால், தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும் என்பதால், பாமகவின் மாம்பழம் சின்னம் தற்சமயம் முடக்கி வைக்கபடுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை ராமதாஸ் தரப்பு கொண்டாட, அன்புமணி தரப்பு அதனை விமர்சித்து வந்தது. இவ்வாறான நிலையில் பாமகவின் கூட்டணி யாருடன் என்பது தற்சமயம் வரை உறுதி செய்யபடவில்லை. அன்புமணி அதிமுக பக்கம் ஆதரவு தெரிவித்து வருவதால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
17 ஆம் தேதி ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால், அதற்கு திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி ஆதரவாளர் பாலு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று தவெகவுக்கும் அழைப்பது விடுத்த அவர், அழைப்பிற்கு பின், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் என அனைவரிடம் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் விஜய் தலைமயிலான கூட்டணியில் பாமக சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

