மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் என்னும் துறையின்கீழ் “ஹெல்த் ஐடி சிஸ்டம்” என்னும் புதிய முறை நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட உள்ளது.
இந்த ஐடி திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு தனிநபரும் அவர்களுடைய உடல் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் ஐடியில் பதிவு செய்பவர் உடல் எடை,ரத்த வகை அவர்களுக்கு உள்ள உடல்நலக் குறைபாடு போன்றவை பற்றி பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
இதில் இருக்கும் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவரின் ஐடியை அவர் பர்மிஷன் இல்லாமல் மற்றொருவர் பார்க்க முடியாது இதனால் தனிநபரின் இன்ஃபர்மேஷன் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகள் கிளினிக் ஆய்வகங்கள் பற்றிய தகவல்களும் இந்த டிஜிட்டல் ஹெல்த் மிஷன் ஐடியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.இதனால் மருத்துவர்களை ஊடகங்கள் வழியாகவே சந்தித்து நோய்க்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.நடுத்தர குடும்பம் மக்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.