குழந்தை தத்தெடுப்புக்கு பிறகு ஏற்படும் பிரச்சனை தான் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம்!!! இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பேட்டி!!! 

0
79
#image_title

குழந்தை தத்தெடுப்புக்கு பிறகு ஏற்படும் பிரச்சனை தான் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம்!!! இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பேட்டி!!!

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் யு ஓகே பேபி திரைப்படம் குழந்தை தத்தெடுப்புக்கு முன்னரும் பின்னரும் ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகள் பற்றி பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது என்று பேட்டி அளித்துள்ளார்.

குணச்சித்திர வேடங்களில் நடித்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தார். பின்னர் 2012ம் ஆண்டு வெளியான ‘ஆரோஹனம்’ திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் அறிமுகமானார்.

இதைத் தெடர்ந்து இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து தற்பொழுது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆர் யு ஓகே பேபி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆர் யு ஓகே பேபி திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அபிராமி, இயக்குநர் மிஷ்கின், ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர், லட்சுமி இராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் ஆர் யு ஓகே பேபி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனம் சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் “சமீபத்தில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நான் ஆர் யு ஓகே பேபி திரைப்படத்தை இயக்கியுள்ளேன். இந்த திரைப்படத்திற்கு முன்னர் நான் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ஆர் யு ஓகே பேபி திரைப்படம் முற்றிலும் வேறுபட்டது.

குழந்தைகள் தத்தெடுக்கும் பொழுதும் தத்தெடுத்த பின்னரும் ஏற்படும் ஏற்படும் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை பற்றி ஆர் யு ஓகே பேபி திரைப்படம் பேசுகின்றது. ஒரு குற்றத்துடைய சமூக அம்சங்கள் மற்றும் சட்ட அம்சங்கள் பற்றிய விவாதமாக உருவாக்கப்பட்டுள்ள ஆர் யு ஓகே பேபி திரைப்படத்தின் கதை தற்பொழுது உள்ள சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய ஒன்று” என கூறியுள்ளார்.