சிக்கிம் மாநிலத்தில் மாயமான முன்னாள் அமைச்சர்! கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! 

Photo of author

By Sakthi

சிக்கிம் மாநிலத்தில் மாயமான முன்னாள் அமைச்சர்! கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி!
சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்கள் கால்வாய் ஒன்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலமும் ஒன்று. சிக்கிம் மாநிலத்தில் முதல்வராக பிரேம் சிங் தமாங் அவர்கள் ஆட்சி புரிந்து வருகிறார். தற்பொழுது உயிரிழந்துள்ள முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்கள் ரைசிங் சன் என்ற கட்சியின் நிறுவனர் ஆவார்.
மேலும் சிக்கிம் மாநில சட்டசபையின் முதல் சபாநாயக்கராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1970ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பவுடியால் அவர்கள் முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை 7ம் தேதி சிக்கிம் மாநிலம் பாங்யோங் மாவட்டத்தில் உள்ள சோட்டாசிங்டாம் என்ற அவருடைய சாந்த ஊரில் இருந்து பவுடியால் அவர்கள் காணாமல் போனார். இதையடுத்து காணாமல் போன முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்களை தேடி வந்தனர்.
இதற்கு மத்தியில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள புல்பாரி என்னும் நகரத்தில் உள்ள டீஸ்டா கால்வாயில் அடையாளம் தெரியாத உடல் மிதந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது காணாமல் போன நாளன்று பவுடியால் அவர்கள் அணிந்திருந்த உடையையும் கை கடிகாரத்தையும் வைத்து அந்த உடல் பவுடியால் அவர்களுடையது தான் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
இது குறித்து காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்களின் உடல் தான் இது. அவருடைய உடை மற்றும் கை கடிகாரத்தை வைத்து தான் அடையாளம் கண்டு இது பவுடியால் அவர்களின் உடல் என்று உறுதி செய்தோம். பிரதே பரிசோதனை முடிந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று கூறினர்.
இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் கலாச்சாரத்தை பற்றியும் சமூக இயக்கம் பற்றியும் ஆழ்ந்த புரிதல் உள்ள முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்களின் மறைவிற்கு சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் இரங்கல் தெரிவித்துள்ளார்.