இந்த ஃபேரன் லவ்லி கீரம் அழகு சாதனப் பொருளாக 1971ஆம் ஆண்டு காப்புரிமை பெற்று விற்பனைப் பொருளாக சந்தைக்கு வந்தது.இதனை ஹிந்துஸ்தான் யுனிலிவர் எனும் நிறுவனம் தயாரிப்பு செய்கிறது. இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இது விற்பனையாகிறது.
2012 ஆம் ஆண்டு இந்த பேர் அண்ட் லவ்லி கிரிமை 80% மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.இதன்பிறகு இதன் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முதன்மையாக விளங்கியது.
மேலும் ஃபேரன் லவ்லி க்ரீம் ஆண்டு விற்பனையில் 560 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருமானத்தை ஈட்டுகிறது. இது இந்தியாவில் 50-70% பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது முதன்மை பிராண்ட் ஃபேர் & லவ்லியில் இருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்குவதாக அறிவிப்பு வெளியாகயுள்ளது. இன சமத்துவமின்மை மற்றும் அழகுத் தரங்கள் குறித்து உலகளாவிய விவாதம் நடைபெறுவதால் இந்த முடிவை எடுப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்துஸ்தான் யூனிலீவர் பிராண்டில் “ஃபேர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளது. மேலும் கிரீம் புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்றும் ஒப்புதல் கிடைத்தவுடன் திருத்தப்பட்ட பெயருடன் கூடிய பேக் அடுத்த சில மாதங்களில் சந்தையில் கிடைக்கும் எனவும் அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா கூறியுள்ளார்
இந்தியாவில் விற்கப்படும் இரண்டு அழகுசாதன பொருட்களின் விற்பனையை நிறுத்துவதாக அமெரிக்க பன்னாட்டு ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.