சீனாவை தொடர்ந்து இங்கும் ஆரம்பித்த இயற்கை பேரழிவு! பல பேர் மாயமான பரிதாபம்!
கடந்த சில மாதங்களாகவே உலகமெங்கும் பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பலவும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது குறிப்பிடப் பட்டது. எங்கு நோக்கினும் கனமழை, பெரு வெள்ளம், நிலச்சரிவு போன்றவை இவை அனைத்துமே உலகம் தொடர்ந்து வெப்பமடைவதால் தான் நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து பனிப்பாறைகள் உருகி வருவதும் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
இமாச்சல் பிரதேசம், சீனா போன்றவைகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் இந்த இயற்கை பேரிடர்கள் தொடர ஆரம்பித்து உள்ளது. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் பெய்தது. அந்த கனமழையை தொடர்ந்து அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி பல குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 20 பேர் தற்போது வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒரு 7 மாத இரட்டைக் குழந்தைகளும் அடங்கும்.
இது தவிர 50 பேர் காணாமலும் போயுள்ளனர். வெள்ள நீரானது சில இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் வரை சூழ்ந்து காணப்படுகிறது. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அனைத்தும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனை தொடர்ந்து மின்வினியோகமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதை தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியும் அங்கு தீவிரபடுத்தப் பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் தனது இரங்கலை ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் டென்னசி மாகாணத்தில் மூன்றாவது கட்ட அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.