தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

Photo of author

By Hasini

தற்போது வரை 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட புதியவகை கொரோனா! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்று முடிந்து விட்டது என்று நாமெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தாமதம் புதிய உருமாற்றம் அடைந்த, பல பிரள்களை கொண்ட அதிவேகமாக பரவும் கொரனோ கண்டறியப்பட்டு உள்ளது. பலரும் சுதாரித்துக்கொண்ட நேரத்தில் திரும்பவும் உருமாறிய கொரோனா தொற்று ஓமைக்ரான் என்று புதிதாக ஒரு வைரஸ் அனைத்து நாடுகளிலுமே பரவி வருகிறது.

இதற்கு ஓமைக்ரான் என்று பெயர் வைத்துள்ளனர். இது பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகிறது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டாலும், தற்போது அனைத்து நாடுகளுக்கும் பயணித்து வருகிறது. இதுவரை 57 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும்  கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இந்த ஓமைக்ரான் பரவல் நிலைகள் குறித்தும், இதன் பாதிப்புகளால் ஏற்பட்ட இறப்புகள் இதுவரை பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை 57 நாடுகளில் ஓமைக்ரான் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறதா? அல்லது அதற்கான சிகிச்சைகள் எந்த அளவிற்கு பயன் தருகிறது? தடுப்பூசிகள் அதற்கு எதிர்வினை ஆகிறதா? என்பதை குறித்து அறிய இன்னும் சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முதன் முதலில் ஓமைக்ரான் பாதித்த நோயாளி குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து அனைத்து நாடுகளும் விமானப் பயணங்களை தடைசெய்துள்ளது. மேலும் விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிரமான சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பிறகு அது சாதாரண கொரோனா தொற்றா? அல்லது ஓமைக்ரான் தொற்றா? என்று உறுதி செய்த பிறகே பயணிகள் சகசமாக வெளியேற முடிகிறது. ஆனாலும் எப்படியோ சில நாடுகளில் இது பரவி உள்ளது.

இந்த விஷயம்  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தனி மனித இடைவெளியை பின்பற்றுவோம். முககவசம் அணிவோம். பாதுகாப்பாக இருப்போம்.