195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்… விலை மட்டும் இவ்வளவு லட்சமா!!

Photo of author

By Sakthi

 

195 கிலோ மீட்டர் செல்லும் புதிய ஓலா ஸ்கூட்டர்… விலை மட்டும் இவ்வளவு லட்சமா…

 

தற்பொழுது 195 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடிய மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய எலக்டிரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

ஓலா எலக்டிரிக் நிறுவனம் அடுத்த மாடலான எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாடல் அதற்கு முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்பொழுது அறிமுகம் ஆகியுள்ள எஸ் 1 ப்ரோ ஜென் 2 என்ற ஸ்கூட்டர் அதற்கு முந்தைய மாடலைப் போன்றே காட்சி அளிக்கின்றது.

 

புதிய மாடலிலும் அதற்கு முந்தைய வெர்ஷனை போலவே வளைந்த பெரிய சைடீ பேனல்கள், டுவின் பிரொஜக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலில் வழங்கப்பட்ட மோனோஷாக் மற்றும் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளுக்கு பதிலாக இந்த புதிய மாடலில் ரியர் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த மாற்றங்கள் மட்டுமில்லாமல் புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2 எலக்டிரிக் ஸ்கூட்டரில் ரேன்ஜ் மற்றும் வேகத்தை ஓலா நிறுவனம் அதிகரித்து இருக்கின்றது. புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2 மாடலில் 4 கிலோ வாட் ஹவர் கொண்ட பேட்டரியும், 5 கிலோ வாட் கொண்ட மோட்டரும் வழங்கப்பட்டுள்ளது.

 

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டர் 192 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது. மேலும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் செல்லும் திறனை புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

 

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா நிறுவனத்தின் இந்த புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டரின் விலை 1,47,499 ரூபாய் என்று எக்ஸ் ஷோரூம் நிர்ணயம் செய்துள்ளது. புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டரின் விலை இதற்கு முந்தைய மாடலின் விலையை விட 7000 ரூபாய் அதிகம் ஆகும். இதையடுத்து ஓலா நிறுவனம் தற்பொழுது எஸ்1 ப்ரோ, எஸ்1 ஏர், எஸ்1 எக்ஸ் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.