107 ரூபாய்க்கு BSNL நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்! இந்த விலைக்கு இத்தனை சேவைகளா?
ஏர்டெல், விஐ, ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை ஏற்றியுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது 107 ரூபாய்க்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களுக்கான விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனமான ஜியோ நிறுவனமும் ரீசார்ஜ் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
ஏர்டெல் மற்றும் ஜியோவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான விஐ நிறுவனமும் ரீசார்ஜ் விலையை உயர்த்தியது. மூன்று நிறுவனங்களும் சுமார் 10 சதவீதம் முதல் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கு மத்தியில் அனைவரும் சமூக வலைதளங்களில் அனைவரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறுங்கள் என்று பேசி வருகின்றனர்.
அதற்கு காரணம் மூன்று நிறுவனங்களும் ரீசார்ஜ் விலையை உயர்த்திய பின்னரும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விலையை உயர்த்தாமல் மலிவு விலையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது தான். அந்த வகையில் தற்பொழுது புதிய திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்பொழுது பிஎஸ்என்எல் நிறுவனம் 107 ரூபாய்க்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி 107 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது இந்த திட்டம் மூலமாக 35 நாட்கள் நாம் பேசலாம். அத்துடன் 200 நிமிடம் அழைப்பும் 3 ஜிபி டேட்டாவையும் 107 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. ரீசார்ஜ் அதிக நாட்கள் வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும்.
ஆனால் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 189 ரூபாய் மற்றும் 199 ரூபாய்க்கு 28 நாட்கள் மட்டும் தான் வேலிடிட்டி வழங்குகின்றனர். என்னதான் விலையை அடிப்படையாக வைத்து பார்த்தால் பிஎஸ்என்எல் சிறந்தது என்றாலும் சேவைகள் மற்றும் இண்டர்நெட் வைத்து பார்க்கும் பொழுது அனைவரும் தனியார் நிறுவனங்களின் சேவைகளையே விரும்புகின்றனர்.