அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்!

Photo of author

By Hasini

அடுத்த 4 மாதங்கள் மிகவும் கட்டுப்பாடு அவசியம்! எச்சரிக்கை விடுத்த டாக்டர்!

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இரண்டாவது அலை பாதிப்புகளை தற்போது கட்டுப்படுத்தி வந்தாலும் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரத்தை நெருங்கிய மாதிரியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் பாதிப்புகளைத் முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாநில அரசுகள் அடுத்தடுத்து தளர்வுகள் அளித்து வருகின்றன. ஆனால் கடந்த 15-ம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம், 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மராட்டியம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கூறியுள்ள நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர்.வி.கே.பால் கூறுகையில் கொரோனா தடுப்பூசிகள் மிகவும் வலிமை வாய்ந்தவை மற்றும் மிகவும் பாதுகாப்பானவை. இணை நோயுடன் போராடுகிறவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா விவகாரத்தில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் எச்சரித்து இருக்கிறார்.

மிகவும் எச்சரிக்கையாக இந்த நாட்களை கடக்க வேண்டும். மேலும் தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதும் குறைந்துள்ளது. இது நமக்கு ஒரு எச்சரிக்கையாக விளங்கும் விஷயமாக இருக்கும். எனினும் தற்போது நிலவரம் கட்டுக்குள் உள்ளது. நாம் அனைவரும் எச்சரிக்கை விதிகளை பின்பற்றினால் மூன்றாவது அலை நம்மை தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள இருக்க வாய்ப்புள்ளது. எனவும் நமக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே கூட்ட நெரிசல்களில் செல்லாமல், தனி மனித இடைவெளியை பயன்படுத்தி அவரவர் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளவும். வெளியே சென்றால் முககவசம் அணிந்து செல்லவும்.