அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு…! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை…!

Photo of author

By Sakthi

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு…! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை…!

Sakthi

இந்தியா முழுவதும் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். என்று மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகி வருகின்றது.
உலக அளவில் இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஊரடங்கு தளர்வுகள் சம்பந்தமாக செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை தொடரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.
என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

அதேபோல நாட்டிலேயே மிக அதிக பாதிப்புகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது .அதற்கான உத்தரவை அந்தந்த மாநில முதலமைச்சர்கள் பிறப்பித்து இருக்கிறார்கள்.