இபிஎஸ்க்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் வெடித்த ஜெயலலிதா வாரிசு பிரச்சனை.. மாறும் தேர்தல் களம்..

ADMK: இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், தொகுதி பங்கீடும், கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரும் பிரிந்த நிலையில், தற்போது புதிதாக ஜெயலிதாவின் மகள் என கூறி கொண்டிருக்கும் ஜெயலட்சுமி என்பவர், தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக அலுவலகத்திற்க்கு விருப்பமனு அளிக்க வந்தார். அப்போது  அதிமுக நிர்வாகிகள் அவரை அலுவலகத்திற்குள் விடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு அரங்கேறி பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. ஆனால் உட்கட்சி விவகாரம் காரணமாக அதிமுக இந்த முறையும் தோல்வியை தான் தழுவும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது, டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதது, ஓபிஎஸ், இபிஎஸ்யை கடுமையாக சாடி வருவது போன்ற பிரச்சனைகள் தற்போது வரை முடிவுக்கு வாராமல் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிமுகவின் முக்கிய முகம் என்பதால், இவர்களின் மோதல் போக்கு அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அதிமுக சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள நிலையில், இவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயலலிதாவின் மகள் என கூறி வரும் ஜெயலட்சுமியும் விருப்ப மனு அளிக்க வந்த நிகழ்வு அதிமுகவில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன் என கூறியது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.