அடுத்த திருப்பம்.. திமுக கூட்டணியிலிருந்து விலகும் முக்கிய கட்சி.. தனித்து களம் காண முடிவு.. 

DMK VCK: மார்ச் மாதம் தமிழகத்தில் 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டுமென திராவிட கட்சிகளும், வெற்றி கூட்டணியில் இணைய வேண்டுமென சிறிய கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியில் தற்போது ஒரு விரிசல் விழப் போகிறது. பல ஆண்டுகளாக திமுக உடன் அங்கம் வகித்து வரும் விசிக தற்போது பாமகவின் வருகையால் விலக போகிறது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சில காலமாகவே பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே சொல்கிறது. இதனால் இரண்டாக பிரிந்துள்ள பாமகவின் ஒரு பகுதி அதிமுக கூட்டணிக்கு சென்று விட்டது.

மீதமிருப்பது ராமதாஸ் தரப்பு மட்டும் தான். அன்புமணி அதிமுக பக்கம் சாய்ந்ததால், ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்று யூகிக்கப்பட்டது. இந்நிலையில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் பாமகவின் ஒரு பகுதி திமுகவிற்கு வந்தால் கூட விசிக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று கூறி இருக்கிறார். இந்த சூழலில் தான் திமுக உடன் இணைவீர்களா என்று ராமதாஸிடம் கேள்வி எழுப்பிய போது, திமுக உடன் கூட்டணி என்றும் சொல் முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்து திமுக உடன் இணைவதை உறுதிப்படுத்தி இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக விசிக திமுகவிலிருந்து வெளியேறும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், பாஜக இருக்கும் கூட்டணியிலும் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் கூறியுள்ளதால், இவர் அதிமுக உடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்லாமல் புதிய கட்சியான விஜய்யுடன் கூட்டணி அமைக்கவும் அவர் யோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவ்வாறான நிலையில், விசிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.