ADMK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈடுபட தொடங்கிய நிலையில், வேட்பு மனுக்களை விநியோகிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்கள் கட்சியை நிலைநிறுத்தும் வேலைகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
மேலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்தே அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியபட்டவர்களை நீக்கி வருகிறார். அந்த வகையில், முதலில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரை நீக்கிய இபிஎஸ் அண்மையில் கொங்கு மண்டலத்தின் டாப் தலையான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இதன் பின் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், மீதமிருக்கும் நால்வரும் வெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்தனர். இவ்வாறு தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய அமைச்சர்களை கட்சியிலிருந்து நீக்குவது தேர்தல் முடிவில் அதிமுகவிற்கு பாதகமாக அமையுமென்று பலர் கூறியும், இபிஎஸ் அதனை கண்டுகொள்ளவில்லை.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது கை கூடவில்லை. தனக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி வந்தார் இபிஎஸ். இந்த நிலை தொடரும் பட்சத்தில் தற்போது புதிதாக, அதிமுகவின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ். பாபு அதிரடியாக நீக்கம் செய்யபட்டுள்ளார். இபிஎஸ்யின் இந்த செயல் அதிமுகவிற்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.