மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 713 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
இதில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார். அவரை நாடு கடத்தும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது. இதனை அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சன்யுக்தா பராசர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, இதேபோன்று அவருக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.