பொருளாதார துறையில் நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு வழங்கப்பட்டது!

Photo of author

By Hasini

பொருளாதார துறையில் நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு வழங்கப்பட்டது!

Hasini

The Nobel Prize in Economics was awarded to 3 experts!

பொருளாதார துறையில் நோபல் பரிசு 3 நிபுணர்களுக்கு வழங்கப்பட்டது!

ஒவ்வொரு வருடமும் தரப்படும் நோபல் பரிசானது இந்த வருடம் தற்போது தந்து கொண்டிருக்கின்றனர். இந்த பரிசு அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் தரப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு மட்டுமே, சிறப்பு பரிசாக நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு இந்த பரிசானது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தற்போது வென்றுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் நோபல் பரிசை அறிவித்து பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறது அமேரிக்கா.