உலகலாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்தது!

0
141

உலக நாடுகளிடையே உலக நாடுகளை அச்சுறுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் தொற்று பாதிப்பு முதல் முறையாக கடந்த 2019ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது.

இந்த நோய் தொற்று பாதிப்பு பின்பு மெல்ல, மெல்ல, 220க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

இந்த சூழ்நிலையில், உலக வல்லரசு நாடுகள் பலவும் இந்த நோய்த்தொற்று காரணமாக, வெகுவாக பாதிப்பை சந்தித்தன. அதிலும் அமெரிக்கா இந்த பாதிப்பில் தற்போது வரையில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தியாவைப் பொருத்த வரையில் இந்த நோய்த்தொற்று பாதிப்பில் 2வது இடத்தில் இருந்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட இந்த நோய் பரவல் உருமாற்றமடைந்து பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,71,40,167 என்று அதிகரித்திருக்கிறது.

இந்த நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் சுமார் 2,27,75,179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 50,80,39,557 பேர் பூரண குணமடைந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த நோய் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63,25,431 என இருந்து வருகிறது.

Previous articleமாற்றுத் திறனாளிகளுக்கு தனி இட ஒதுக்கீடு! குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
Next articleபயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?