கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

Photo of author

By Pavithra

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகின்றார்.இவர் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வசந்தா,ஒரு பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தினால் எவ்வாறு அக்கம்பக்கத்தினர் அழைத்து,நலுங்கு வைத்து வளைகாப்பு நடத்தவோமோ, அதேபோன்று இந்த பெண்ணும் பூனைக்கு வளைகாப்பு நடத்த அக்கம்பக்கத்தினர் அழைத்து,அந்தப் பூனைக்கு பூமாலை அணிவித்து,ஏழு வகையான தட்டுகளில் நலங்கு பொருட்களும், பூனைக்கு பிடித்தமான உணவுகளையும் வைத்து,வசந்தாவின் குழந்தைகள் உள்ளிட்டோர்,கர்ப்பமான பூனைக்கு நலங்கு வைத்து வளைகாப்பு விழா நடத்தினர்.மறுநாளே அந்த பூனை அழகான 4குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது.
வசந்தாவின் இந்த செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.