சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சல்! அதனால் ஏற்பட்ட பரபரப்பு!

Photo of author

By Hasini

சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சல்! அதனால் ஏற்பட்ட பரபரப்பு!

நவீன காலத்தில் அனைவரும் சமைக்க நேரமில்லாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டு உள்ளோம். அப்படி இருக்கையில் நாம் அனைவரும் துரித உணவுகளை விரும்பி உண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக வெளியில், கடைகளில் சமைத்து டெலிவரி செய்யும் உணவுகளுக்கு அனைவரும் அடிமை என்றே கூறலாம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு தான் சிக்கன். இதை சாப்பிடுவதால் வரும் ஆபத்துக்கள் அனைத்தும் தெரிந்தாலும் கூட அதை சாப்பிடாமல் இருப்பது மிகவும் கடினம்.

நினைத்த நேரத்தில் எல்லாம் பலவிதமான சிக்கன்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அப்படி சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பிலிப்பைன்ஸ் துரித உணவகமான ஜொல்லிபீயில் ஆர்டர் செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்த உணவு பார்சலை திறந்து பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த அந்த பெண்ணிற்கு வறுத்த முகம் துடைக்கும் துண்டு ப்ரை கொடுத்துள்ளனர்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த அந்த பெண் இது குறித்து போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஜொல்லிபீ விற்பனை நிலையம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது.