ADMK: தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை எப்போதும் இல்லாத அளவிற்கு, மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்றும், 6 வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து இந்த முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென்றும், புதிதாக உதயமாகியுள்ள, தவெக திமுகவை எதிர்த்து புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்றும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இவ்வாறு கட்சிகளனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், அதிமுகவில் தலைமை போட்டி மற்றும் பல்வேறு அணிகள் உருவாகி வருகின்றன. மேலும் அதிமுக தலைமையில் வெற்றிடம் நிலவுவதாக அதிமுக உள்வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து வெளிப்படையாக பேசிய அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக எப்போதும் தொண்டர்களை நம்பி செயல்படும் இயக்கம், தலைவனை நம்பி செயல்படாது. எந்த தலைவன் வந்தாலும், போனாலும் அதிமுக நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்று கூறியிருக்கிறார்.
இவரின் இந்த கருத்து அதிமுகவில் தலைமை வெற்றிடம் நிலவுவதை தெளிவுபடுத்தியுள்ளது. சி.வி.சண்முகம் ஏற்கனவே ஒரு முறை பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக பல்வேறு தரப்பினரின் கண்டத்திற்கும் ஆளானார். இதனை தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலாளரின் தலைமை சரியில்லை என்பது போன்று இருக்கும் அவரது கூற்று அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், இபிஎஸ்யின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அதற்கு ஆதரவு தெரிவிக்காமல், இபிஎஸ்க்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

