
ADMK TVK TMC: தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன், நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சி அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார். வாசன் கூறியதாவது, தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் சமநிலை மாறிக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வலுவான எதிர்க்கட்சியாக உருவாக முடியும்.
விஜய்யின் கட்சியும் அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய-மாநில கட்சிகளும் இணைந்தால், அது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சக்தியாக மாறும் என்றார். மேலும் அவர், எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் திமுக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் அதிமுக கூட்டணி உருவாக வேண்டும் என்பதாகும் என்று கூறினார். இதன் மூலம், வாசன் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து, அரசியல் ஆர்வலர்கள் இது அதிமுகவிற்கு ஆதரவாக பேசப்படும் கருத்து என்றும் கூறி வருகின்றனர்.
ஏனெனில், இதற்கு முன் வாசன், அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், வாசனின் இந்த கூற்று அதிமுக சார்பில் அவர் தூதாக செயல்படுகிறார் என்று பார்க்கப்படுகிறது. மக்களிடையே பிரபலமான விஜய்யின் அரசியல் நுழைவு ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வாசனின் கருத்து அந்த பரபரப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் வல்லுநர்கள், இது வரவிருக்கும் தேர்தலுக்கான புதிய அரசியல் சிக்னல் என மதிப்பிடுகின்றனர்.
