ADMK BJP DMDK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் பாமக தேமுதிக போன்ற போன்ற மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. பாமக தற்போது இரு பிரிவாக உள்ள நிலையில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு, பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை புரிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, நாங்கள் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.
எந்த கட்சி சார்பாக இப்படியான தொகுதி பங்கீடு குறித்த செய்தி வெளியானதோ, இதுவே அந்த கட்சிக்கு அழிவு காலத்தை உண்டாக்கும். இது தொடர்பாக அதிமுக-பாஜக தான் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். எப்போது தேமுதிக பெயர் பேசப்பட்டதோ அப்போதே எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்து விட்டது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக ரெட் சிக்னல் காட்டியதை போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.