மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!

0
67

மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!

 

அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார்.

 

நடிகர் உதய்நிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அளித்த பேட்டியில் மாமன்னன் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

மாமன்னன் குறித்து கேட்ட கேள்விக்கு அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனி சாமி அவர்கள் சிரித்துக் கொண்டே ” உதய்நிதி நடித்த மாமன்னன் திரைப்படம் பற்றி கேட்கிறீர்கள். நான் மாமன்னன் படத்தை பார்க்கவில்லை. உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் வேறு இயக்கம்.  நாங்கள் வேறு இயக்கம்.

 

எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் நடித்திருந்தால் நான் பார்த்நிருப்பேன். அது பற்றி பிறகு பதில் சொல்கிறேன்” என்று கூறினார். ஆனால் மாமன்னன் திரைப்படம் தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்தது போல உள்ளது என்று அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயக்கர் தனபால் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்.