பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?

Photo of author

By Hasini

பிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?

இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் காத்ரீனா கைப். இவருக்கும் நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது எனினும் இருவரும் அவர்களது திருமணம் குறித்து இன்னும் மவுனம் காத்து வருகின்றனர். ஊடகங்கள் முன்வந்து கேட்ட பொது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் போர்டு ஹோட்டலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா, கரன் ஜோஹர், கியாரா அத்வானி உட்பட பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இதன் காரணமாக இந்த ஜோடிகள் இருவரும் திருமணத்தை முன்னிட்டு ஹோட்டலில் அறைகள் மற்றும் கார்கள் உள்ளிட்டவற்றை இப்போதிலிருந்தே முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

நடிகை கத்ரினா கைப் ஹாங்காங்கில் பிறந்தவர். இவருக்கு 5 சகோதரிகள் உள்ளனர். அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். தத்தை காஷ்மீரை சேர்ந்தவர். அவர் பூம் திரைப்படம் மூலமாக இந்தி திரையுலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். அவருக்கும் பிரபல நடிகர் விக்கி கவுசாலுக்கும் வருகிற டிசம்பர் மாதம் 7 – 9 வரையிலான தேதிகளில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நடிகர் சல்மான் கான் தற்போது டைகர் 3 படப்பிடிப்பில் இருப்பதால், இவர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சல்மான் கானின் குடும்பம் தவறாமல் கலந்து கொள்ளும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். நடிகை காத்ரீனா கைப் 1983 ம் ஆண்டு பிறந்தவர். நடிகர் விக்கி கவுசால் 1988 ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவர்கள் இருவருக்கும் இடையே 5 வயது வித்தியாசம் உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருமே அந்த விஷயம் வெளிவராமல் மிகவும் இரகசியம் காத்தனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் அவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.