குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்! விரட்டியில் தாய் எடுத்த விபரீத முடிவு!

0
161

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் எருமைப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சபரி தனியார் பஞ்சுமில் தொழிலாளியான இவருடைய மனைவி சரளா இவர்களுக்கு சர்வேஷ் என்ற மகன் இருக்கின்ற நிலையில், மறுபடியும் கர்ப்பமடைந்த சரளா பிரசவத்திற்காக தாய் வீடான பாலாபட்டிக்கு சென்றிருந்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலாப்பட்டிக்கு வந்த கணவரிடம் இரட்டைப் பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து விட்டதே என்று தெரிவித்து சரளா அழுதிருக்கிறார்.

அவர் அங்கிருந்து சென்ற பிறகு நேற்று அதிகாலை சமயத்தில் சரளா தன்னுடைய குழந்தைகளுடன் படுக்கையில் இல்லாததை கண்ட அவருடைய தந்தை நல்லமுத்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்திருக்கிறார்.

அந்தப் பகுதியில் தேடி போது அந்த பகுதியில் இருக்கின்ற கிணற்றில் சரளாவின் சடலம் மிதந்து கொண்டிருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

இது தொடர்பாக விசாரித்த போது கொங்கணாபுரம் காவல் துறையினர் இரட்டை பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததன் காரணமாக, மன உளைச்சலிலிருந்த சரளா குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள், மீனவர்கள், உள்ளிட்டோர் வருகை தந்து 2 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர்.

2 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous articleமுதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்!
Next articleNayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர்