SEEMAN: சீமான் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானில் வட்டம் அடித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலுக்கு பிறகு டிசம்பர் மாதம் 12 முதல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்து. அது மட்டுமல்லாமல் தற்போது தென் கிழக்கு வங்க கடலில் புதிதாக ஆழ்ந்த காற்றழு தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது.
இது, மேலும் வலுபெற்று வட தமிழகத்தை நோக்கி நகர்வதால் வட தமிழக மாவட்டங்களில் கனமழை , மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக சீமான் இண்டிகோ விமானத்தில் மதியம் 1.40 மணியளவில் பயன் மேற்கொண்டிருக்கிறார்.
அப்போது மேக மூட்டத்துடன் இருந்த வானிலை காரணமாக 3.00 மணியளவில் தான் மதுரை செல்ல விமானம் இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் 4.05 க்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் 20 வது நிமிடங்கள் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்து இருக்கிறது.
20 நிமிடங்களுக்கு பிறகு வானிலை சற்று சீராக மாறியதால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இருந்தது . அதில் பயணித்த நாம் தமிழர் கட்சி சீமான் உட்பட பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.