நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

Photo of author

By Hasini

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

Hasini

The plane suddenly caught fire in the middle! Pilots who cleverly jumped out!

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

கடந்த சில நாட்களாகவே விமானத்தில் விபத்து ஏற்படுவதும், ஓடும் நிலையில், ஓடும் போதே  வாகனங்கள் எறிவதும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அது தொழில்நுட்ப காரணமா? அல்லது வேறு ஏதேனுமா? என எதுவும் தெரிவதில்லை. தற்போது  அதே போல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சி மேற்கொள்ள பறந்து சென்று கொண்டிருந்தது.

அதில் இரண்டு விமானிகள் பயிற்சியும் மேற்கொண்டிருந்தனர். அந்த நிலையில் திடீரென விமானம் நடு வழியிலேயே தீப்பிடித்துள்ளது. மேலும் அது வெடித்துவிடும் எனவும் விமானிகள் கருதி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் உடனடியாக விமானம் தீப்பிடித்த உடனேயே விமானத்தில் இருந்து வெளியே குதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்கள் 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் இந்த விமானம் விழுந்த போது கீழே மூன்று வீடுகளும் இருந்துள்ளன. எனினும் இதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. குடியிருப்பு வாசிகளுக்கு எந்தவிதமான  பாதிப்பும் ஏற்படவில்லை. விமானிகளில் ஒருவர் தரையிலும், ஒருவர் வயர்களுக்கு இடையேயும் சிக்கியிருந்தார். தற்போது காயமடைந்த விமானிகள் 2 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.